Healthy food how to eat well எப்படி உண்பது நல்லது?

மனிதனை தவிர ஏனைய ஜீவ ராசிகள் அனைத்தும்இயற்கையில் கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்கின்றன.

அவைகள் நோய் நொடிகள் அற்றும் இருக்கின்றன. 

தீயை பயன்படுத்தி தயாரிக்காத எவ்வகை உணவும் இயற்கை உணவு ஆகும். 

  • பழங்கள் 
  • கூட்டுப்பழங்கள்
  • பழரசங்கள்
  • கீரைகள் 
  • காய்கறிகள் 
  • கூட்டுகாய்கறிகள் 
  • உலர்பழங்கள் 
  • முளைக்கட்டிய தானியங்கள்
  • பருப்பு வகைகள்

ஆகிய அனைத்தும்  இயற்கை உணவு ஆகும்.

    உணவை தேர்ந்தெடுத்தல்

  1. எளிதில் ஜீரணமாகும் உணவை அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

  2. அன்றாட உணவில் தானியங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள், பருப்புகள், பழங்கள் முறையான அளவில் சேர்க்க வேண்டும்.
  3. வயதிற்கு, உடலுக்கு ஏற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. நார்சத்துகளுடைய உணவை சேர்த்து கொள்ள, கழிவுகள் தங்காது.
  5. நமக்கு எந்த உணவு ஒவ்வாமை என அறிந்து அவற்றை தவிர்த்தல் நலம்.
  6. அதிக காரம், புளிப்பு, மைதா மாவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
  7. காலையில் சிறுதானிய உணவுகளை எடுத்தல் சிறந்தது.
  8. மாமிசம் அதிக எண்ணெய் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
  9. துளசி வேம்பு கர்பூரபூரவல்லி, அருகம்புல் போன்ற மூலிகை உணவினை பயன் அறிந்து அவற்றை பயன்படுத்த வேண்டும். 
  10. நோய்கள் பாதிக்கப்பட்டோர் அதை குணமாக்கும் உணவு எது என்று அறிந்து உண்ண வேண்டும். 
  11. மன அமைதியை தரும் சாத்வீக உணவை உண்ண வேண்டும். 
  12. கருகிய, அடிபிடித்த உணவை உட்கொள்ள கூடாது.
               உணவு சுத்தம் செய்யும் முறை
  1. காய்கறிகள், கீரைகளை நன்கு கழுவிய பிறகு மரப்பலகையை கொண்டு வெட்ட வேண்டும்.
  2. காளிபிளவர், திராட்சையை உப்பு கலந்த சுடு நீரில் கழுவ வேண்டும்
  3. சிறுதானியங்களில் கல், மண் அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதால் அதிக முறை சுத்தப்படுத்த வேண்டும்.
  4. கீரைகளில் வேறு, புல் வகைகளை களைய வேண்டும்.
  5. அரிசியை அதிக முறை கழுவ கூடாது.
  6. வாழைப்பூவின் நார் பகுதி, இஞ்சியின் தோல் போன்றவற்றை கூடுதல் கவனம் எடுத்து நீக்க வேண்டும்.
  7. சமையலுக்கு பயன்படுத்தும் துணி தூய்மையானதாக இருத்தல் அவசியம்.
                         உண்ணும் முறை
  1. வடக்கு திசை நோக்கி உண்ணக்கூடாது.
  2. தரையில் விரிப்பின்மீது அமர்ந்து உண்ண வேண்டும்.
  3. பேசிக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, சிரித்துகொண்டு உணவு சாப்பிட கூடாது.
  4. உண்பதற்கு அமர்ந்த பின்னும், உண்ட பின்னும் தண்ணீர் அதிகம் குடிக்க கூடாது.
  5. வேக வேகமாக உண்ணுதலும், மிக மெதுமாக உண்ண கூடாது, பசித்து புசிக்க வேண்டும்.
  6. உண்ணும் பழக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். குளித்த பிறகு 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.
  7. கை கால்களை சுத்தம் செய்து மன அமைதியுடன், தெளிவுடன் உட்கார்ந்து உண்ண வேண்டும்.
  8. நன்கு உமிழ்நீருடன் மென்று உண்ண வேண்டும்.
  9.  வெதுவெதுப்பான புதிய உணவையே உண்ண வேண்டும்.
  10. உண்ணும் முன் நெய் சேர்ந்து உண்ணுதல் எளிதில் உணவு உட்செல்லும்.
  11. ஒரு வேளை உணவிற்கும், அடுத்த வேளை உணவிற்கும் 4 மணி நேரம் இடைவெளி தேவை.

  12. ஆறு சுவைகளில் முதலில் இனிப்பு சுவையை சாப்பிட வேண்டும்.
  13. உணவு வீணாகிவிடும் என்று அளவிற்கு அதிகமாக உண்ணக்கூடாது பெரியவர்கள், குழந்தைகளுக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும்.

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author